Monday, November 12, 2007

யானைப் பசிக்கு சோளப் பொரி...????

நான் படித்த ஒரு கேள்வி பதில் பகுதியில் இருந்து ஒரு சிறிய துணுக்கு...

கேள்வி..

சமீபத்தில் தமிழக அரசு கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் இனத்தவருக்கு 7ரூ இட ஒதுக்கீடு செய்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த இடஒதுக்கீடானது பெருவாரியாக உள்ள பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதை எவ்வாறு தாங்கள் ஆதரிக்கின்றீர்கள்? சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இட ஒதுக்கீடு என்ற பெயரில், திறமையற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கப் போகின்றீர்கள்?..

பதில்...

உங்கள் கேள்வியே தவறானது. திறமையற்ற, தோல்வி அடைந்தவர்களை யாரும் தேர்வு செய்வதில்லை. தகுதி, திறமை என்பது பற்றி சரியான தெளிவான விளக்கம் இல்லையே! 5000 ஆண்டுகாலமாக நிலவியதற்கு 50 ஆண்டுகால இடஒதுக்கீடு என்பதே யானைப் பசிக்கு சோளப் பொரி மாதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...

பதில் சிறியதாயினும்..அலுத்தமும் ஆழமும் அதிகம்...நான் எனது பார்வையில் உங்களுடன் ஒரு சில கருத்துக்களை ஆராயும் ஆவளுடன்..இதோ ஒரு சில வாதங்கள்...

13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு இறுதி வரை...விஜய நகர நாயக் அரசாட்சி.தமிழர்கள் நாடு இலந்து அடிமை வாழ்க்கையை ஆரம்பித்த காலம்..

அதற்க்கு முன்னும் சாதி பாகுபாடுகள்..ஆனால் ஒரு மொழிக்குள்...தமிழ் நாட்டு மக்களும், மாற்று மொழி இனத்தவரும் கலந்து அதே சாதி அடிப்படையில் அடிமை வாழ்க்கை...அப்போது முக்கிய தொழிலான விவசாயம்.. அடுத்த மொழி மேல் இனத்தவர் கைகளில், நிலச் சொந்தகாரார்களாக, கைமாறியது...

அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு அயல் நாட்டவர் ஆட்சி என்றாலும் இதே முறை தொடர்ந்தது..அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பதில் குறியாக இருந்தர்கள்...

அடுத்த்து நமது சுய ஆட்சி..
ஒருகாலத்தில் பருத்தி பயிரிட்டவர்கள் ஏழைகளின் வியர்வைகளால் கோடிகளை குவித்தார்கள்..சந்ததிகளை கடல் கடந்து கல்வி புகட்டினார்கள்..அவர்களும் சுயதொழில் என மேலும் குவித்தார்கள் கோடிகளை...கோடிகளுக்கேத்த சொகுசு வாழ்க்கை...

மறுபுறம் அரசங்க வேலையும் வங்கி வேலையும்..மேல் மட்டத்தில் இருந்த படித்தவர்கள் மட்டும்... அள்ளிக்கொண்டார்கள் வாய்ப்புகளை... அப்போது ஒரு சில நல்லவர்களால் ஒரு சில மாற்றங்கள்..யானை பசிக்கு சோளப் பொறியாய் வாய்ப்புகள் வழங்கப்பட்டது..

இருப்பினும் பல நூற்றாண்டுகளாக, அடிமைகாளாக ஒரு சில குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும்.. சமூகத்தல் ஒன்றும் செய்யாமல், ராஜ வாழ்க்கை.மதிப்பு மரியாதை, என அதிகாரவர்கத்தினர் ஒரு புறம்..

வருந்தி உழைப்பவன்.. அதே வருத்தத்துடன்.. உழைப்பவனாகவே... இதில் என்ன கொடுமை என்றால் இன்னும் இதே நிலைதான்...யானைப் பசிக்கு சோளப் பொரி... நியாயம்தானா..??

Wednesday, August 29, 2007

சரியா...??....தவறா...?

பீகாரில், ஒரு வாலிபன் செயின் பறிப்பு குற்றத்திற்காக நடுவீதியில் அடி உதை, அதற்கு மேல் காவல் துறையின் அத்து மீறல், அராஞகம்...

பார்த்த அனைவரையும் பதற வைக்கும் ஒரு சம்பவம்...

உண்மையாக யோசித்துப் பார்த்தால்...சரியா தவறா எனப் புழப்படும் நம் அறிவிக்கு...

காசு போதையில், சாலையில் உறங்குபவர்களை கொன்றவர்கள், நல்லவர்களாக நாட்டில்...

உயிர்களை நடுச் சாலையில் நெருப்பில் பொசிக்கியவர்கள், உல்லாசமாக உத்தமர்களாக உளவுகிறார்கள்..

நாட்டுப் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து, பந்தாவாக வாழும் பதவிப் பிரியர்கள்..

வரி கட்டாமல் இருக்க என்ன என்ன வழி என் யோசித்து ஏமாத்தும், குடிமகன்கள்..

ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல் படும் ஏழைகளிடம், ஐம்பது நூறு என அடித்து புடுங்கும் காவல்துறையினர்...

இன்னும் இதுபோல் எத்தனை எத்தனை...வறுமையின் கொடுமையால், வாழ்வைத் தொலைக்கும் இது போன்ற அப்பாவிகளை, தண்டிக்கும் நல்லவர்களே..

அடிக்கும்முன் யோசியுங்கள்...சரியா..? தவறா...??...மகிமை புரியும் மகான்களாக மாற வேண்டாம்..மன்னிக்கும் மனிதர்களாக மாறலாமே..மனித்த்தை மதிக்கலாமே...!!!

Thursday, August 16, 2007

!!!...சுதந்திரம்...???

ஒரு காலத்தில்..ஆச்சர்யக் குறி..ஆனால் இப்போது கேள்விக் குறி...

நான் இந்த முறை பலருக்கு சுதந்திர வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். எனக்கும் பல வாழ்த்துச்செய்திகள் வந்தது..

வந்த ஒரு வாழ்த்துச் செய்தியின் தமிழாக்கம்...
சுதந்திரம் உரிமை அல்ல ..உணர்ச்சி..
பெருமை படுங்கள்..உணர்வதை எண்ணி...

அறுவது வருடங்கள், அறிவியலின் துணையோடு, அற்புதங்கள் அறங்கேரிக் கொண்டிரிக்கும் அருமையான வருடங்கள்...

என் மனதில் தோன்றிய சின்ன கேள்வி..சுதந்திரம் என்ற உணர்வை உண்மயாய் உணர்கிறோமா...??

சுதந்திரத்தை அதிகமாக உணருகிறோம் என எடுத்துக்கொண்டால்..சுதந்திரத்தின் எதிர் பதமான பயத்தை கம்மியாக உணர்வதாக ஒத்துக்கொள்ள வேண்டும்...

எனது இருபத்தியாறு வருட வாழ்க்கையில்.. நாளுக்கு நாள்..பயத்தின் விழுக்காடு..பொது வாழ்க்கையிலும் சரி தனி வாழ்க்கையிலும் சரி, அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே, தவிர குறைந்ததாகவே தோனவில்லை...

கருத்துக்களைச் சொல்ல பயம், இரவில் பெண்கள் வெளியே வர பயம், வீடு வாங்குவதை நினைத்தால் பயம், அரசு அலுவலகங்களை அண்ட பயம்..காலை சாலை நெரிசலில் வாகனத்தை எடுக்க பயம்..குழந்தைகளுக்கு நல்ல கல்வி என என்னுவதே பயம்..

எங்கும், பணம் இருந்தால் பயம் இல்லை என்ற நிலை..பாலாகும் மனிதம்...

உண்மை உரைக்கத்தான் செய்யும்..உணர்வுகளை உதாசினப்படுத்தாமல், உணர்வுகளுக்கு, உயிர் கொடுக்க உழைப்போம்..ஒன்று சேர உயர்வோம்...

Wednesday, August 15, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

பல மகாத்மாக்களின், தன்னலமற்ற உயிர் தியாகங்களால் தாரைவார்க்கப்பட்டது இந்த சுதந்திரம்.

இன்று ஒரு நாள் மட்டும், எண்ணி போற்றினால் பத்தாது.. மூச்சும் பேச்சும், நாட்டுக்காகவே...என நாளும் எண்ணுதல் வேண்டும்.

கொண்டாடும் முன் கொஞ்சம் யோசிக்கவேண்டும். எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்.. நமது முன்னேற்றத்திற்க்கு முட்டுக்கட்டைகள் என்ன..?..இன்னும் இது போல பல...

நாடு முன்னேற சாதி மத பேதங்களை தீயில் இட்டு சாம்பலாக்குவோம்...இயன்ற வரை உதவியாய் இருப்போம், இல்லை என்றாலும் உபத்தரம் இல்லாமல் இருப்போம்...

மனிதர்களை மதிப்போம். அகங்காரங்களை ஒழிப்போம்..பொறாமைகளை புறம் தள்ளுவோம்.. அனைவரும் உயர்வோம்..

குருதியை வியர்வையாக்கி, நாடு முன்னேற நாமும் ஒரு படி கல்லாய் பாடுபடுவோம்....

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்,
மு.பாலசுப்ரமணியன்

Friday, June 29, 2007

ஏன் அரசியல்? - பதவி

ஆறு கோடி மக்கள் (பிரான்ஸ் நாட்டு மக்கள்த்தொகை), கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல்..234 பேர்..கிட்டத்தட்ட 14 முறை என நினைக்கிறேன். இதில் எத்தனை பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கும்..?..

இதில் ஏழைகள் எத்தனை பேர்..? நடுத்தர மக்கள் எத்தனை பேர்..? பணம் படைத்தவர்களெத்தனை பேர்..? பணம் பன்னியவர்கள் எத்தனை பேர்..? கல்வி அறிவு படைத்தவர்கள் எத்தனை பேர்..? கள்வர்கள் எத்தனை பேர்..?

பெருமை, ஒரு பதவியில் இருப்பது பெருமையான விசியம். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே, இருக்கும் பதவிக்குப் பெருமை சேருகிறது...

முதல் பதவியை துறந்து, இளையவர்களுக்கு வழி விட்டது ஒரு காலம். புடித்த பதவியில் இருப்பவர்களை விட பிடித்த பதவியை நழுவாமல் பற்றிக் கொள்கிறவர்களே அதிகமாக இருப்பது இக்காலம்...

நொடிகளில் காலம் கணிக்கும் இக்காலத்தில், கண்காட்சியில் வைத்துக் காக்க வேண்டிய தேரை நம்பி, நிலாப் பயணத்தை கனவு கானலாமா..??

எப்போது மாறும்...?

Wednesday, May 23, 2007

ஏன் அரசியல்? - கையூட்டு

நமது நாடு ஒரு குடியரசு நாடு..சொல்லவும், பிறர் சொல்லக் கேற்கவும் பெருமையாகத் தான் இருக்கிறது...ஆனால் நாட்டில் உரிமைகள் மதிக்கப்படுகின்றதா? எனில் பலரிடம் இல்லை என்ற பதிலே வரும்...

சின்ன சின்ன விசியங்களுக்கு கூட அரசாங்கத்தை அனுக அச்சப்படும்படி, புரியாத புதிர்களாய் வழிமுறைகள்... வழிமுறை தெரிந்து முயற்சி செய்தாலும், முட்டுக்கட்டைகளாக காசுக்காக அலையும் கையூட்டு கனவான்கள்...

தேர்தலில் படிக்காதவர்களைப் பற்றி யோசிக்கும் நாம், வழிமுறைகளை வகுக்கும் போது ஏன் எளியோர்களைப் பற்றி எண்ணுவது இல்லை. நேரத்திற்கு ஒரு நாகரீகத்திற்கு மாறும் நாம் ஏன், வறன்ட வ்ழிமுறைகளை மாற்றாமல் இருக்கிறோம்..?

காலை முதல் மாலை வரை, அறுபது ருபாய்க்காக அல்லல் படும் ...ஏழைகளிடம் பத்து இருபது புடுங்கும் முன், முதல் தேதியில் முழு பணத்தையும் கண்ணில் காணும் அரசு கனவான்களே, சற்றே யோசிங்கள் அவர்களின் துன்பங்களை... நன்றி இறைவனுக்கு..ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இன்றும் மழைப் பெய்கிறது..

வாழ்வதோ நாம் செலுத்தும் வரிப் பணத்தில்..ஆனால் அரசு அலுவலகங்களில் எதுக்கு எடுத்தாலும் காசு...அது மட்டுமா அலையவிடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!!

எப்போது எளியவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறதோ..அன்றுதான் சுதந்திரத்துக்காக ஆருயிரை மாய்த்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதி உண்டாகும்...!!

Tuesday, May 22, 2007

ஏன் அரசியல்? - சுயநலம்

ஒரு காலத்தில் நமது நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு, அல்லலை அனுபவித்து வந்தது...விடுதலை அடைந்தவுடன் விந்தைகள் விளையாடுவற்க்குப் பதில், சுய நலவாதிகளின் சுரண்டலால், களவும் கொள்ளையும் தாண்டவமாட ஆரம்பித்தது ...

வாழ்க்கையை தொலைத்து, நமக்கு சுதந்திர காற்றை அளித்தவர்கள், ஓரம் கட்டப்பட்டனர்.. ஒரத்தில் ஒதுங்கி ஒளிந்தவர்கள் எல்லாம், சமய சந்தர்பங்க்ளை பயன்படுத்தி, பணம் பார்த்தது மட்டும்மின்றி அரியணையிலும் அமர்ந்தார்கள்...

பட்டம் பதவிகளைக் காத்துக் கொள்ள, சுயநல சூழ்ச்சிகலாள், ஒன்றும் அறியா பாமரர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினர், அவர்களை அறியவிடாமல்...

உரிமைகள் மறுக்கப்பட்டன, பணத்தின் மதிப்பு உயிரை விட உத்தமாக உயர்ந்தது.

சாதி, மொழி, மதம் போன்ற வேரருக்கப் படவேண்டிய பேதமைகளை...அழிக்காமல், மறைமுகமாக மெருகேற்றி மகிமை கூட்டினார்கள்...

தனது குடும்பம், தனது உறவினர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என குடியரசு, குடும்ப அரசுகளாக மாற அரம்பித்தது...

அராஞகத்தாலும் அடவடியாலும், நல்லவர்கள் அரசியலை அண்டாதபடி ஒடுக்கப்பட்டார்கள்...புரியாத புதிராய், கிடைத்தது சந்தோசம் என்ற எண்ணத்தில், அடிமைகளாய் இருப்பதை உணராமல் நாமும்....