Wednesday, May 23, 2007

ஏன் அரசியல்? - கையூட்டு

நமது நாடு ஒரு குடியரசு நாடு..சொல்லவும், பிறர் சொல்லக் கேற்கவும் பெருமையாகத் தான் இருக்கிறது...ஆனால் நாட்டில் உரிமைகள் மதிக்கப்படுகின்றதா? எனில் பலரிடம் இல்லை என்ற பதிலே வரும்...

சின்ன சின்ன விசியங்களுக்கு கூட அரசாங்கத்தை அனுக அச்சப்படும்படி, புரியாத புதிர்களாய் வழிமுறைகள்... வழிமுறை தெரிந்து முயற்சி செய்தாலும், முட்டுக்கட்டைகளாக காசுக்காக அலையும் கையூட்டு கனவான்கள்...

தேர்தலில் படிக்காதவர்களைப் பற்றி யோசிக்கும் நாம், வழிமுறைகளை வகுக்கும் போது ஏன் எளியோர்களைப் பற்றி எண்ணுவது இல்லை. நேரத்திற்கு ஒரு நாகரீகத்திற்கு மாறும் நாம் ஏன், வறன்ட வ்ழிமுறைகளை மாற்றாமல் இருக்கிறோம்..?

காலை முதல் மாலை வரை, அறுபது ருபாய்க்காக அல்லல் படும் ...ஏழைகளிடம் பத்து இருபது புடுங்கும் முன், முதல் தேதியில் முழு பணத்தையும் கண்ணில் காணும் அரசு கனவான்களே, சற்றே யோசிங்கள் அவர்களின் துன்பங்களை... நன்றி இறைவனுக்கு..ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இன்றும் மழைப் பெய்கிறது..

வாழ்வதோ நாம் செலுத்தும் வரிப் பணத்தில்..ஆனால் அரசு அலுவலகங்களில் எதுக்கு எடுத்தாலும் காசு...அது மட்டுமா அலையவிடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!!

எப்போது எளியவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறதோ..அன்றுதான் சுதந்திரத்துக்காக ஆருயிரை மாய்த்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதி உண்டாகும்...!!

Tuesday, May 22, 2007

ஏன் அரசியல்? - சுயநலம்

ஒரு காலத்தில் நமது நாடு, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு, அல்லலை அனுபவித்து வந்தது...விடுதலை அடைந்தவுடன் விந்தைகள் விளையாடுவற்க்குப் பதில், சுய நலவாதிகளின் சுரண்டலால், களவும் கொள்ளையும் தாண்டவமாட ஆரம்பித்தது ...

வாழ்க்கையை தொலைத்து, நமக்கு சுதந்திர காற்றை அளித்தவர்கள், ஓரம் கட்டப்பட்டனர்.. ஒரத்தில் ஒதுங்கி ஒளிந்தவர்கள் எல்லாம், சமய சந்தர்பங்க்ளை பயன்படுத்தி, பணம் பார்த்தது மட்டும்மின்றி அரியணையிலும் அமர்ந்தார்கள்...

பட்டம் பதவிகளைக் காத்துக் கொள்ள, சுயநல சூழ்ச்சிகலாள், ஒன்றும் அறியா பாமரர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினர், அவர்களை அறியவிடாமல்...

உரிமைகள் மறுக்கப்பட்டன, பணத்தின் மதிப்பு உயிரை விட உத்தமாக உயர்ந்தது.

சாதி, மொழி, மதம் போன்ற வேரருக்கப் படவேண்டிய பேதமைகளை...அழிக்காமல், மறைமுகமாக மெருகேற்றி மகிமை கூட்டினார்கள்...

தனது குடும்பம், தனது உறவினர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என குடியரசு, குடும்ப அரசுகளாக மாற அரம்பித்தது...

அராஞகத்தாலும் அடவடியாலும், நல்லவர்கள் அரசியலை அண்டாதபடி ஒடுக்கப்பட்டார்கள்...புரியாத புதிராய், கிடைத்தது சந்தோசம் என்ற எண்ணத்தில், அடிமைகளாய் இருப்பதை உணராமல் நாமும்....

Tuesday, May 1, 2007

ஏன் அரசியல்? - ஒழுக்கம்

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கண் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்..
.........என்பது வள்ளுவரின் பொய்யா மொழி...உண்மைதான்...இது எக்காலத்துக்கும் ஏத்த மொழிதான்.

நாம் அல்லல் படுவதற்க்கு ஆணிவேர், ஒழுக்கமின்மை. போக்குவரத்து நெரிசலில் புறள்வதற்கும், வறுமையில் வாடுவதற்கும், பட்டினிக்கும் பஞ்சத்திற்கும், நிம்மதியை துளைத்ததுற்கும் ஒரே காரணம் ஒழுக்கமின்மை.

ஒழுக்கமின்மை - நமது மனதிற்கு தவறு என தட்டும் ஒன்றை, மனதை சமாதானப்படுத்திவிட்டு, சாதிக்க நினைப்பதே ஒழுக்கமின்மை.

போக்குவரத்து நெரிசலில், நமக்கு முன் இருப்பவனும் நம்மை போல துன்பப்படுகிறான் என தெரிந்தும், மனதின் மௌன மொழியை மதிக்காமல், முந்தியடித்து முன்சென்று, நெரிசலை மேலும் நெரிசலாக்குவது தீயொழுக்கம்தான்..

தெரிந்தே வரி ஏய்ப்பு செய்யதும், கையூட்டு வாங்கி அடுத்தவர்களை அல்லல் படவைப்பதும், படிக்காத பாமரர்களை இலவசத்தை காட்டி இழுத்து ஏமாத்துவதும், தீயொழுக்கம்தான்.

ஆறறிவு படைத்த, படித்த மனிதர்களே...சற்று சிந்தியுங்கள்...
காசு பணம் கிடைக்காவிட்டாலும், சின்னச் சின்ன ஆத்ம திருப்தியாவது கிடைக்கும், ஒவ்வொரு ஒழுக்கமுள்ள செயலுக்கும்.
சிறு துளி பெரு வெள்ளம் போல் வாழ்க்கை வசந்தமாகமாறும், ஒழுக்கத்தை உயிராக உணர்ந்தால்....