Wednesday, May 23, 2007

ஏன் அரசியல்? - கையூட்டு

நமது நாடு ஒரு குடியரசு நாடு..சொல்லவும், பிறர் சொல்லக் கேற்கவும் பெருமையாகத் தான் இருக்கிறது...ஆனால் நாட்டில் உரிமைகள் மதிக்கப்படுகின்றதா? எனில் பலரிடம் இல்லை என்ற பதிலே வரும்...

சின்ன சின்ன விசியங்களுக்கு கூட அரசாங்கத்தை அனுக அச்சப்படும்படி, புரியாத புதிர்களாய் வழிமுறைகள்... வழிமுறை தெரிந்து முயற்சி செய்தாலும், முட்டுக்கட்டைகளாக காசுக்காக அலையும் கையூட்டு கனவான்கள்...

தேர்தலில் படிக்காதவர்களைப் பற்றி யோசிக்கும் நாம், வழிமுறைகளை வகுக்கும் போது ஏன் எளியோர்களைப் பற்றி எண்ணுவது இல்லை. நேரத்திற்கு ஒரு நாகரீகத்திற்கு மாறும் நாம் ஏன், வறன்ட வ்ழிமுறைகளை மாற்றாமல் இருக்கிறோம்..?

காலை முதல் மாலை வரை, அறுபது ருபாய்க்காக அல்லல் படும் ...ஏழைகளிடம் பத்து இருபது புடுங்கும் முன், முதல் தேதியில் முழு பணத்தையும் கண்ணில் காணும் அரசு கனவான்களே, சற்றே யோசிங்கள் அவர்களின் துன்பங்களை... நன்றி இறைவனுக்கு..ஒரு சில நல்லவர்கள் இருப்பதால் இன்றும் மழைப் பெய்கிறது..

வாழ்வதோ நாம் செலுத்தும் வரிப் பணத்தில்..ஆனால் அரசு அலுவலகங்களில் எதுக்கு எடுத்தாலும் காசு...அது மட்டுமா அலையவிடுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!!

எப்போது எளியவர்களின் உரிமைகள் மதிக்கப்படுகிறதோ..அன்றுதான் சுதந்திரத்துக்காக ஆருயிரை மாய்த்தவர்களின் ஆத்மாக்களுக்கு அமைதி உண்டாகும்...!!

2 comments:

Anonymous said...

ஆஹா… அருமையான விமர்சனம்

உங்கள் கட்டுரைகளில் மிகவும் ஈர்த்த அம்சமே, உபதேசம் செய்யாமல், வறட்டுச் சித்தாந்தகள் ஏதும் இல்லாமல், வாசிப்பவரை தன்னுடனே அணைத்துச் செல்லும் பாங்குதான்.

குறுகிய எல்லைகளுக்குள் சிக்கிக்கொள்ளாத எழுத்தாளர் என்ற வகையில் ...இன்னும் 50 ஆண்டுகளுக்கு அப்புறம் வரும் தலைமுறைக்கு ஏற்ற மாதிரியும் உங்களால் எழுத முடியும் என்பது எனது மதிப்பீடு .


தமிழ்செல்வன் (நவீன் நண்பன்)

Rajesh Anandakrishnan said...

Dear Bala, your blog is wow & really awesome. It is so well written and I read it many times. Try to write more often.