Friday, March 2, 2007

தமிழா ஆங்கிலமா..??-

பட்டிமன்றங்கள் முதல் பதவிக்காக பதுங்குபவர்கள் வரை பந்தாக பயன்படுத்திய வினா., இருப்பினும் இதோ என்னுடைய பார்வையில்..

என்னை பாதித்த பல நிகழ்வுகளினால் என்னை ஆலோசிக்கவைத்த கேள்வி..தமிழா ஆங்கிலமா..??

கடை வீதியில் பொருள் வாங்கும் போது ஆங்கிலத்தில் குழந்தையை அதட்டும் அம்மா..

இருவர்க்கும் தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் வார்த்தைகளை பரிமாரிக் கொள்ளும் வாடிக்கையாளரும் கடைக்காரரும்..

நமக்கான சின்னச் சின்ன குறிப்புகளில் கூட (மளிகை பட்டியல் முதல் மறதிக்கு குறிப்பு எடுப்பது வரை) ஆங்கிலத்தில் எடுக்கும் பழக்கம்....

கையெழுத்து - யோசித்த்து கூட இல்லை தமிழில் போடுவது பற்றி!!!

தொல்லை தரும் தொலைகாட்சியில், கொஞ்சும் ஆங்கிலத்தின் நடுவில் ஆங்காங்கே இடையில் இன்பதமிழ்...

இவ்வாறு நம்மை அறியாமல் நமது சொத்தை தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் நாம்...

ஆங்கிலம் ஒரு மொழி, கத்துக்கொள்வது தவறு இல்லை. நம்மில் இல்லா நல்ல விசியங்களை கத்துகொள்ள ஒரு ஊடகம்..

முதாதையர் சொத்துகாக உறவினர்களின் உயிரை கூட எடுக்கும் இந்த காலத்தில், உயிரினும் மேலான தமிழை எப்படி உதாசனப்படுத்தலாம்..???

தமிழ் நமது சொத்து, உடலில் ஜீன்கள் போல், நமது உயிரில் கலந்தது தமிழ்.

வெட்டிப் பதட்டுக்காக, ஆங்கிலத்தில் அறையும் குறையுமாக, அல்லல் பட்டு அசத்த நினைப்பதை விட, தன்னார்வத்துடன் தமிழை நமது நாவீல் தவலவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக, நம்முல் அழியும் அமுதத்தை அடுத்த பல தலைமுறைகளுக்கும் அள்ளிக்கொடுக்கலாம்.

2 comments:

சிறில் அலெக்ஸ் said...

சுப்பு,
(எந்த சுப்பு?)

ரெம்ப நல்லா துவங்கியிருக்கீங்க. தமிழ்மணம்(thamizmanam.com) தேன்கூடு(thenkoodu.com) திரட்டிகள்ல சேத்துடுங்க.

தொடர்ந்து எழுதுங்க. சூடு பிடிக்க கொஞ்ச நாள் ஆகும்.

All the best. :))

Unknown said...

மிகவும் நன்றாக இருக்கிறது...